கணினிமயமாகும் டாஸ்மாக். இனி பில் உண்டு, ரூ.10 கிடையாது..!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (15:54 IST)
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட உள்ளதாகவும் ஒவ்வொரு மது பாட்டலுக்கும் பில் உண்டு என்றும் பத்து ரூபாய் அதிகப்படியாக வாங்கப்பட மாட்டாது என்றும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து கடைகளிலும் டிஜிட்டல் பயமாகி அனைத்து விற்பனையையும் கணினியில் பதிவு செய்யும் முறை விரைவில் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. 
 
டாஸ்மாக் நிறுவனத்தை முழுவதுமாக கணினி மயமாkக ரயில்டெல் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் இதற்காக 294 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த டிஜிட்டல்மயமாக்கும் பணி முடிவடைய ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் கணினி மயமாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு மதுபாட்டிற்கும் பில் வழங்கப்படும் என்றும் அதிகப்படியாக பத்து ரூபாய் வாங்கப்படுவது இனி நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்