ஞாயிறு முதல் சென்னையில் செக்கெண்ட் ரவுண்ட் மழை: தமிழக வெதர்மேன்!!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (20:52 IST)
சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 


 

 
 
டெல்டா மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் சனிக்கிழமை முதல் நல்ல மழை இருக்கும் எனவும் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து சென்னையில் மீண்டும் மழை தொடங்கும் என கூறியுள்ளார். 
 
அதேபோல் எந்த புயலும் உருவாகவில்லை தேவையற்ற செய்திகளையும், வதந்திகளையும் நம்பாதீர்கள். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மட்டுமே உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார். 
 
ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு அல்லது திங்கள்கிழமை காலையில் இருந்து துவங்கும் மழை 4 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்