103 வாக்காளர்களை மட்டுமேக் கொண்ட வாக்குச்சாவடி… எந்த மாவட்டத்தில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (07:44 IST)
தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு சற்று முன்னர் தொடங்கி அமைதியான முறையில் நடந்துகொண்டு இருக்கிறது.

தமிழகத்தின் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி இதுவரை அமைதியான முறையில் நடந்து வருகிறது. அதிக அளவிலான வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரே வாக்குச்சாவடியில் அதிக வாக்காளர்கள் சென்று கூட்டம் அதிகமாகி தாமதமாவது தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா லோயர் கேம்ப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மொத்தமே 103 வாக்காளர்கள்தான் உள்ளனராம். தமிழகத்தின் மிக குறைந்த அளவில் வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி இதுதான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்