நெல்லை, தூத்துக்குடியில் இடியுடன் கூடிய மழை! – சென்னை வானிலை மையம்!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (13:14 IST)
தமிழகம் முழுவதும் கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்க உள்ளது. தற்போதே பல்வேறு மாவட்டங்களில் வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்தும் வருகிறது.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்