10 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (10:02 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளப்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்