தமிழகத்தில் இன்று எங்கெங்கு கனமழை?

வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (15:01 IST)
தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரியில் இன்று பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த வாரம் முதலாகவே பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த வாரமும் கனமழை நீடித்து வரும் சூழலில் பல பகுதிகளில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இயல்பை விட 100 சதவீதத்திற்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில் வட தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரியில் இன்று பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதே போல நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்