தூய்மையற்ற ரயில் நிலையங்கள் பட்டியலில் 6 இடங்களை பிடித்த தமிழ்நாடு…

Arun Prasath

சனி, 5 அக்டோபர் 2019 (13:24 IST)
இந்தியா முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களை ஆய்வு செய்த மத்திய அரசு, தூய்மையற்ற ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள 720 ரயில் நிலையங்களை, ஆய்வு செய்த மத்திய அரசு தூய்மையான மற்றும் தூய்மையற்ற ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் கூட  தமிழ்நாடு ரயில் நிலையங்கள் எதுவும் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் தூய்மையற்ற ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் 6 இடங்களை தமிழ்நாடு ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளது. அதன் படி, பெருங்குளத்தூர், கிண்டி, வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, சிங்கம்பெருமாள் கோவில், பழவந்தாங்கல் ஆகிய ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியலில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரயில் நிலையங்கள், முதல் பத்தில் ஏழு இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜம்மு தவாய், விஜயவாடா, ஹரித்வார் ஆகிய நகரங்களின் ரயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளது கூடுதல் தகவல்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்