சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இதையடுத்து தருமபுரியை சேர்ந்த டாக்டர்.சஃபியின் மகன் முகமது இர்ஃபான் என்பவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து மேலும் சிலர் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்தது.
இது சம்மந்தமான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது அரசிடம் ’எத்தனை மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈட்டுபட்டுள்ளனர், எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு இடைத்தரகர்தான் சம்மந்தப் பட்டுள்ளார் என்பதை எப்படி நம்புவது ?’ என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் முன்வைத்தது. மேலும் ‘அதிகாரிகளின் உதவி இல்லாமல் ஆள்மாறாட்டம் செய்ய வாய்ப்பில்லை’ எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.