தமிழ் சித்தர்கள் எல்லாம் லெஜண்டுகள்! – எச்.ராஜாவின் தமிழ்ப்பற்று

சனி, 5 அக்டோபர் 2019 (12:55 IST)
பிரதமர் மோடி தமிழ் குறித்து உலக அரங்கில் பேசியதை தொடர்ந்து பாஜகவினரும் தங்களது தமிழ் பற்றை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

சமீபகாலமாக பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணங்களில் தமிழில் பேசி வருகிறார். திருக்குறளோ அல்லது மற்ற தமிழ் செய்யுளோ ஏதோ ஒன்றை சொல்லிதான் உரையை தொடங்குகிறார். கீழடி அகழ்வாராய்ச்சி தமிழ் குறித்த செய்திகளை மேலும் உலக நாடுகள் கவனிக்கும்படி செய்திருக்கிறது. தாமரை மலராத தமிழகத்தில் தமிழ் பேசி பாஜகவை வளர்க்க மோடி இப்படி செய்து வருவதாகவும் அரசியல் கட்சிகள் சில விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் தமிழக பாஜக பிரமுகர்களும் மோடி ஸ்டைலில் தமிழ் வளர்க்க தொடங்கியுள்ளனர். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா “பெருமை கொள்வோம் - சித்தர்கள் சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கத் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலைச்சுவடிகளில் தங்களது தாய்மொழியான தமிழிலேயே எழுதிவைத்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

சமீப காலமாக இந்தி ஆதரவை வலியுறுத்தி வந்த பாஜகவினர் திடீரென தங்கள் ஆதரவை தமிழ் பக்கம் திருப்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலைச்சுவடிகளில் தங்களது தாய்மொழியான தமிழிலேயே எழுதிவைத்துள்ளனர்...2/2

— H Raja (@HRajaBJP) October 4, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்