ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – திமுக, அதிமுக கோரிக்கை!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (14:26 IST)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பல காலமாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது பகுதி பகுதியாக தேர்தல் நடந்து வருகிறது. முன்னதாக புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்ததாக நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இன்று தேர்தல் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்