விதி (தமிழகத்தில்) நடத்தும் நாடகத்தின் விந்தை கதாப்பாத்திரங்கள் நம் அமைச்சர்கள் ;
சிரிக்க ஒன்று ;
துயர் ஒன்று ;
துன்பம் ஒன்று ;
துன்பம் துயக்கவொன்று ;
தரம் இல்லாமல் ஒன்று ;
ஸ்லீப்பர் செல் ஓன்று ;
மரத்திற்கு மரம் தாவும் மந்தி ஓன்று;
ஆம் என்கும் ஒன்று;
இல்லை என்கும் மற்றொன்று;
ஏகடியம் பேசும் ஒன்று ;
தப்பிக்கும் தலையுடன் ஒன்று
நூல் கட்டி ஆட்டுக்கையில் நூதனமாய் ஆடும் பொம்மைகள் இவர்கள் !
வரும் முன் அறிவதில்லை
வந்த பின் புரிவதில்லை
அது நீட், நெடுவயல்,கதிராமங்கலம் உட்ப்பட
நிலை அற்ற உலகத்தில் நிலையாய் இருப்பது எது ?
இந்த களி மண் பொம்மைகளா ?
தகுதியை மறந்து தலைக்கனம் கொண்டு சிலர் ஆடுகிறார்கள் !
வார்த்தை வரம் கொடுத்த மக்களை மறந்து நாத்திகர்கள் ஆகிவிட்டார்கள் !
தான் நடிக்கும் பாத்திரம் அறியாமலே
வாழும் இவர்கள் தமிழகத்தின் தப்புதாளங்கள்