பொங்கல் பரிசுத் தொகுப்பு… ஜனவரி 9 முதல் – தமிழக அரசு அறிவிப்பு !

Webdunia
புதன், 1 ஜனவரி 2020 (10:12 IST)
தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 9 முதல் 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் வரும் பொங்கல் விழாவிற்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் செய்ய தேவையான அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி போன்ற பொருட்கள் அடங்கிய பொங்கல் பையும், ரொக்க பணமும் வழங்குவது வழக்கம். உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது பொங்கல் பை மற்றும் ரொக்கம் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் முடிந்துள்ள நிலையில்  ஜன.9-ம் தேதி முதல் 12-ம்தேதிக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்