தமிழ்நாட்டில் ஆமை வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி… ஓபிஎஸ் ஆதங்கம்!

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (08:15 IST)
தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ‘தமிழ்நாட்டைவிட பின் தங்கிய மாநிலங்களான பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்குவங்கம், அசாம் போன்ற மாநிலங்களில்கூட 24 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வெறும் 19 விழுக்காடு மக்கள்தான் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள்.

புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழகம்தான் தடுப்பூசி போடுவதில் கடைசி இடத்தில் உள்ளது.தமிழகத்தை விட மக்கள் தொகை குறைந்த மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் அதிக அளவில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவதில் தமிழகத்தில் சுணக்கம் இருப்பதாகத் தெரிய வருகிறது. எனவே, தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி, தேவைப்படின் புள்ளி விவரங்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து விரிவாக எடுத்துரைத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்