இந்தியாவில் தயாரான 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: WHO எச்சரிக்கை

Siva

செவ்வாய், 14 அக்டோபர் 2025 (15:59 IST)
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, 'கோல்ட்ரிஃப்' உட்பட அந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்', குஜராத்தில் தயாரிக்கப்பட்ட 'ரெஸ்பிஃபிரெஷ் டிஆர்' மற்றும் 'ரீ லைஃப்' ஆகிய மூன்று மருந்துகளிலும் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அதிகப்படியான டைஎத்திலீன் கிளைகால் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
மத்திய பிரதேசத்தில் 'கோல்ட்ரிஃப்' மருந்தை உட்கொண்டு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த மருந்துகளை இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்றும், இவற்றை எந்த நாட்டிலும் கண்டறிந்தால் WHO-வுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசும் அனைத்து மாநிலங்களுக்கும் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்