வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரிய கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை வெனிசுலா அரசு மூடியுள்ளது.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக மச்சாடோ போராடியதை பாராட்டி, நார்வேயின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி அவருக்கு பரிசை அறிவித்தது.
இந்த அறிவிப்புக்குப் கடும் எதிர்ப்பு தெரிவித்த வெனிசுலா அரசு, நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள தூதரகத்தை மூடுவதாக உடனடியாக அறிவித்தது.
வெனிசுலா எடுத்த இந்த முடிவால் வருத்தம் தெரிவித்துள்ள நார்வேயின் வெளியுறவு அமைச்சகம், காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இரு நாடுகளுக்குமிடையே தொடர்ந்து நல்லுறவைப் பேண விரும்புவதாக தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு நோபல் வழங்கப்பட்ட விவகாரம், இரண்டு நாடுகளின் இராஜதந்திர உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.