கணவன் நீடுடி வாழ விரதம்.. மறுநாளே கணவனை கொன்ற மனைவி.. கள்ளக்காதலனுடன் கைது..!

Mahendran

செவ்வாய், 14 அக்டோபர் 2025 (16:22 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில், மனைவி ஒருவர் தன் கணவர் ரிங்குவை கள்ளக்காதலனுடன் சேர்ந்து சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கணவரின் நீண்ட ஆயுளுக்காக 'கார்வா சௌத்' விரதம் இருந்த அடுத்த நாளே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
 
கட்டிட மேஸ்திரி ரிங்கு, தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பும்போது, மனைவி திட்டமிட்டபடி கள்ளக்காதலன் அஜித் அவரை சுட்டு கொன்றான். விபத்து நடந்ததுபோல மனைவி நாடகமாடினார்.
 
கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், மனைவி மீது சந்தேகம் கொண்ட ரிங்கு, அஜித்தை நேருக்கு நேர் சந்தித்து கடுமையான வாக்குவாதம் செய்து, பலமுறை அறைந்துள்ளார்.
 
கணவன், அஜித்தை தாக்கியதால் ஆத்திரமடைந்த அஜித், ரிங்குவின் மனைவியிடம், "கணவனா? அல்லது நானா? , யாரை தேர்ந்தெடுக்கிறாய்?" என மிரட்டியுள்ளான். காதலனை மனைவி தேர்ந்தெடுத்தவுடன் இந்த கொலை நடந்துள்ளது. 
 
விசாரணையில் உண்மை தெரியவர, ரிங்குவின் மனைவியும், அஜித்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்