ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (15:08 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு வகையில் நிதி திரட்டி வரும் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதிய தொகை வழங்கப்படாது என அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பிற்காக பல்வேறு வகைகளில் நிதிகள் திரட்டி வருகிறது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஓராண்டுக்கு இந்த ஊதியம் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஓராண்டுக்கு 15 நாள் ஈட்டிய விடுப்பின் ஊதியம் நிறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்