தமிழகத்தில் இன்று 64 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: சுகாதாரத்துறை தகவல்

ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (18:22 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று 64 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது.
 
இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 64 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 28 பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 523 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மட்டுமேஉயிரிழந்ததால் தமிழகத்தில் மொத்தம் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 60 என்றும், இதனையடுத்து தமிழகத்தில் 1020 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்