தூத்துக்குடி விரையும் ராணுவப்படை?

Webdunia
புதன், 23 மே 2018 (17:40 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை கட்டுபடுத்த துணை ராணுவப்படையை அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
தூத்துகுடியில் நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு அதனால் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். 
 
இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் தமிழக மக்கள் மீண்டு வராத நிலையில் இன்று மீண்டும் நடத்தப்பட்ட போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது, இதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். 
 
தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு உதவ தயாராக இருப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் கெளபா தெரிவித்திருந்த நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய அரசை துணை ராணுவ படையை அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்