தமிழகம் முழுவதும் 6 இடங்களில் புதிய விமான நிலையங்கள்! – மத்திய அரசு தகவல்!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (11:29 IST)
தமிழகம் முழுவதும் உள்ள 6 சிறிய விமான நிலையங்களை மேம்படுத்தி பயன்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கல் முடிந்து பட்ஜெட் தொடர் விவாதங்கள் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் விமான சேவைகளை மேம்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ”தமிழகத்தில் விமான நிலைய மேம்பாட்டிற்காக 195 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி தமிழகத்தில் உள்ள 5 விமான நிலையங்களை புணரமைக்கவும், மேம்படுத்தவும் உதவும்” என கூறியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையங்கள் முக்கிய பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர தஞ்சை, நெய்வேலி, ராமநாதபுரம், வேலூர், சேலம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் இருந்தாலும் அன்றாட பயன்பாட்டில் இல்லை. இந்நிலையில் இந்த நிதியானது விமான நிலையங்களை மேம்படுத்தி பொது பயன்பாட்டை அதிகரிக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்