ஏரி, குளத்தில் மட்டுமல்ல… கடலிலும் தாமரை மலரும் – முன்னாள் விசிக பிரமுகர் வீட்டில் தமிழிசை !

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (09:24 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த பிரமுகர் வீட்டு காதுகுத்து விழாவில் தமிழிசை கலந்துகொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சோழவல்லியைச் சேர்ந்த ரங்கேஷ. முன்னாள் விசிக பிரமுகரான இவர் இப்போது பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்கு பாஜக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறது.இவர் தன் குழந்தைகளுக்கு நடத்திய காதணி விழாவில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய தமிழிசை ‘சிறுத்தைகளெல்லாம் தற்போது மகிழ்ச்சியாக பாஜகவில் இணைந்து வருகிறார்கள். ரங்கேஷ் போன்றவர்கள் பாஜகவை மேலும் வலிமைப்படுத்துகிறார்கள். தற்போது உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விரைவில் பாஜக ஆட்சி மலரும். அதில் ரங்கேஷின் பங்கும் இருக்கும். ஏரி குளங்களில் மட்டுமல்ல; கடலிலும் தாமரை மலரும். நாங்கள் பிள்ளைகளுக்குத்தான் காது குத்துவோமே தவிர, மற்றவர்களுக்குக் காது குத்த மாட்டோம்.’ எனப் பேசினார்.

வழக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ளவர்கள் கட்சியில் இருந்து விலகினாலும் வேறு கட்சியில் இணையமாட்டார்கள். ஆனால் இப்போது அதிசயமாக பாஜகவிலும், அர் எஸ் எஸ்-லும் இணைவது அக்கட்சிக்குப் பலவீனமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்