ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர் கைது ! பரபரப்பு தகவல்

வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (18:08 IST)
சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உ.,பிரதேசம் அமேதி மற்றும், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். 
இதில் அமேதி தொகுதி ராகுலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றார். ஆனால் ராகுல் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு ,பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டிட்ட பாரத் தர்ம ஜனசேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளியை தோற்கடித்தார். 
 
ராகுலிடம் தோல்வியை தழுவிய துஷார் , ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அஜ்மானில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அத்தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அத்தொழியை விட்டுவிட்டார்.
 
இதில் நளிஸ் அப்துல்லா என்பவருக்கு, துஷார் தர வேண்டிய ரூ. 19 கோடி பாக்கி இருந்துள்ளது. அவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த தொகைக்காக காசோலையை அவர் கொடுத்துள்ளார் துஷார். அந்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. பின்னர் பலகட்ட பேச்சு வார்த்தைகள் அஜ்மானில்  இருவரும் நடத்தினர்.  பலனளிக்காததால், துஷார் மீது நளிஸ் அப்துல்லா போலீஸில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் துஷாரை கைது செய்த போலீஸார் , அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்