சந்தி சிரித்த பின் சந்திக்கிறார் கவிஞர்: வைரமுத்துவை கிண்டலடித்த தமிழிசை

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (15:13 IST)
வைரமுத்துவின் மறுப்பு வீடியோவை கிண்டலடிக்கும் விதமாக தமிழிசை சந்தி சிரித்தபின் சந்திக்கிறார் கவிஞர் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின்  பிரபல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
 
இதுகுறித்து டிவிட்டரில் பதிலளித்த வைரமுத்து “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்’ என கூறியிருந்தார். ஆனாலும் அவர் மீது புகார்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.
இதுகுறித்து இன்று வீடியோ வெளியிட்ட வைரமுத்து, நான் கெட்டவனா? அல்லது நல்லவனா? என்பதை இப்பொழுது யாரும் முடிவு செய்யாதீர்கள்.  என் மீது புகார் கூறுபவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். நீதிமன்றம் சொல்லட்டும் நான் எப்படிபட்டவன் என்று. ஒரு வாரமாக மூத்த வழக்கறிஞர்களோடு ஆழ்ந்து கலந்தாலோசித்தேன்.
 
ஏராளமான அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன். உள்நோக்கத்துடனே என் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. அது முழுக்க முழுக்க பொய். இதனை சட்ட ரீதியாக சந்திக்க தயார் என ஆவேசமாக பேசினார்.
 
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தன் டிவிட்டர் பக்கத்தில் சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர் ...நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன?சந்தக்கவிஞர்மீது சந்தேகமே அதிகரிக்கிறது என கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்