விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாஜகவுக்கு பாதிப்பா? தமிழிசை செளந்தரராஜன் பதில்..!

Mahendran
திங்கள், 29 ஜூலை 2024 (12:09 IST)
விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாஜகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், பாஜக ஏற்கனவே வளர்ந்த கட்சி என்றும் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
வேலூர் மாவட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் தந்தை குமரி ஆனந்தன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்ப்பதற்காக தமிழிசை சௌந்தரராஜன் நேரில் வருகை தந்து இருந்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’விஜய் கட்சியால் பாஜகவுக்கு பாதிப்பா என்ற கேள்விக்கு ’விஜய் கட்சி தொடங்கியுள்ளதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை, பாஜக ஏற்கனவே நன்கு வளர்ந்த கட்சி, பாஜகவின் கொள்கைகள் வேறு விஜய் கட்சியின் கொள்கைகள் வேறு, எனவே விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று தெரிவித்தார்.
 
மேலும் தமிழக முதலமைச்சர் அரசியல் ஆதாயத்திற்காக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை என்றும் நிதி ஆயோக் கூட்டம் என்பது மத்திய மாநில அரசுகளுக்கு பாலமான ஒரு கூட்டம் என்றும் தெரிவித்தார்.
 
தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து வருவதாகவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயகுமார் படுகொலை, ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை தமிழக அரசு இன்னும் கைது செய்யவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்றும் கொலை வழக்கில் இன்னும் கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது’ என்றும் அவர் கூறினார்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்