இந்நிலையில் இப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் இதுபற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது “ அவ்வளவு பெரிய நடிகரை என்னைத் தவிர யாரும் விமர்சிக்க மாட்டார்கள் எனத் தெரியும். ஆனால் அதை சொல்லியாக வேண்டும் என்று தோன்றியதால்தான் பதிவிட்டேன். பெரிய நடிகரை விமர்சித்தால் அவரின் ரசிகர்கள் விமர்சிப்பார்கள் என தெரியும். ஆனால் ஒரு மூத்த ஊடகவியலாளராக என் பொறுப்பு காரணமாக நான் அப்படி எழுதினேன்” எனக் கூறியுள்ளார்.