அன்புமணி எம்.எபி.எஸ் மட்டும்தான் ; ஆனா நான் அதுக்கு மேல - தமிழிசை பதிலடி

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (10:55 IST)
அன்புமணியை போல் தந்தையின் நிழலில் வந்தவர் நான் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவருவதற்கான திட்டத்தை முதலில் யார் கொண்டு வந்தது என்பது குறித்து அன்புமணி ராமதாஸுக்கும் தமிழிசைக்கும் மோதல் உருவானது. இதனையடுத்து ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துக்கொண்டனர்.   
 
அன்புமணி ராமதாஸ் என்னை தலைவராக இருக்க தகுதி இருக்கின்றதா எனக் கேட்கிறார். 20 ஆண்டுகால கடின உழைப்பு, அறிவாற்றல், தேசிய பண்பு இருப்பதால்தான் தேசியக் கட்சியின் தலைவராக வந்திருக்கிறேன். யார் அறிவாளி என என்னுடன் விவாதம் நடத்த அன்புமணி தயாரா? என தமிழிசை சவால் விட்டார்.   
 
தமிழிசையின் சவாலை ஏற்ற அன்புமணி “நான் மெரிட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். தமிழிசை பரிந்துரையின் பேரில் எம்பிபிஎஸ் படித்தவர். அதனால் தமிழிசை சவுந்தரராஜன்தான் அறிவாளி என்பதை நானே ஒத்துக்கொள்கிறேன். இருப்பினும் யார் அறிவாளி என விவாதம் நடத்த நான் தயார்” என தெரிவித்தார்.
 
இந்நிலையில், இதுபற்றி ஒரு பிரபல வார இதழ்க்கு பேட்டியளித்த தமிழிசை “அவர் கூறுவதில் உண்மையில்லை. அன்புமணி எம்.பி.பி.எஸ் படிப்போடு நிறுத்திவிட்டார். நானோ 3 அதையும் தாண்டி வெளிநாடுகளுக்கு சென்று மேற்படிப்புகளை படித்துவிட்டு வந்திருக்கிறேன். நான் தந்தையின் நிழலில் வரவில்லை. ராமதாஸ் இல்லையேல் அன்புமணி இல்லை. ஆனால், குமரி ஆனந்தன் இல்லையென்றாலும் தமிழிசை இருந்திருப்பேன்” என பதிலடி கொடுத்துள்ளார்.
 
மேலும், அன்புமணியோடு விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்