தமிழிசை வேட்புமனு நிராகரிக்கப்படுமா? திமுக எதிர்ப்பால் பரபரப்பு!

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (12:30 IST)
தூத்துகுடி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திராஜன் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என திமுக தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதை தமிழிசை தெரிவிக்கவில்லை என்றும், அதனால் தூத்துக்குடியில் பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்றும் திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுக தரப்பின் கடும் எதிர்ப்பு காரணமாக தமிழிசையின் வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று பகல் 1:30 வரை ஒத்திவைப்பதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 
பாஜக வேட்பாளரான தமிழிசை வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் கனிமொழி வெற்றி உறுதி என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தமிழிசையுடன் மோதி வெற்றி பெற்றால்தான் கனிமொழிக்கு பெருமை என்ற ரீதியிலும் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.
 
எப்படியோ இன்று மதியம் 1.30 மணிக்கு தமிழிசை வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்பது தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்