ஐ.நா.வின் அமைதி விருதுக்கு தமிழக சிறுவன் பரிந்துரை!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (13:36 IST)
ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த சக்தி என்ற சிறுவன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவர் பழங்குடியின சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறார்.


 
 
காஞ்சிபுரம் மாவட்டம் தியாகிகள் அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் சக்தி. பாசிமணி விற்றுக்கொண்டிருந்த சக்தி தொண்டு நிறுவனம் ஒன்றில் உதவியுடன் இந்த பள்ளியில் படித்து வருகிறான்.
 
விடுமுறை நாட்களில் பாசிமணி விற்க செல்லும் சக்தி தனது சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்களை சந்தித்து பேசுவது வழக்கம். அப்போது நீங்களும் பள்ளியில் படித்தால் பெரிய ஆளாக வரலாம், நான் உங்களை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன் என ஆர்வமூட்டி அவர்களது பெற்றோரிடமும் பேசுவான்.
 
சிறுவன் சக்தி மற்றும் அவனது நண்பர்கள் மூலம் 25 சிறுவர்கள் இதுவரை பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதனால் பழங்குடியின சிறுவர்கள் பலர் பள்ளிக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
 
இப்படி பழங்குடியின சிறுவர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடும் சிறுவன் சகதியை ஊக்குவிக்கும் விதமாக அவனது பெயரை ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருதுக்கு ஹாண்ட் இன் ஹாண்ட் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்