தண்ணீரில் இயங்கும் எஞ்சினைக் கண்டுபிடித்த தமிழன் – கண்டுகொள்ளாத இந்தியா…கைகொடுத்த ஜப்பான் !

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (11:47 IST)
முழுக்க முழுக்க தண்ணீரில் இயங்கும் எஞ்சினை தமிழகத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

சுற்றுசூழலுக்குப் பாதிப்பில்லாமல் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதுதான் தற்காலத்தைய முக்கியமானத் தேவையாக உள்ளது. அத்தகைய ஒருக் கண்டுபிடிப்பாக முழுக்க முழுக்க தண்ணீரால் இயங்கும் எஞ்சின் ஒன்றை தமிழரான குமாரசாமி என்பவர் கண்டுபிடித்துள்ளார். தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனை எரிபொருளாக உபயோகித்து ஆக்ஸிஜனை வெளியேற்றும் தன்மையுள்ளது இந்த எஞ்சின். அதனால் சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது.

ஆனால் அதன் பயன்பாடு நமது நாட்டுக்குக் கிடைக்காமல் ஜப்பானுக்குக் கிடைக்கப் போகிறது. ஆம் இந்த எஞ்சினை 10 ஆண்டுகள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த குமாரசாமி அதன் பின்னர் பல நிறுவனங்களிடம் பல நிறுவனங்களிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால் யாரும் கண்டுகொள்ளாத சூழ்நிலையில் ஜப்பான் நாட்டு அரசின் உதவியை நாடியுள்ளார். இப்போது ஜப்பான் அரசு இந்த கண்டுபிடிப்பை ஏற்று ஜப்பானில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர இருக்கிறது.

இந்த இயந்திரத்தை விரைவில் இந்தியாவிலும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முயற்சி செய்வேன் என இதை அறிமுகப்படுத்திய குமாரசாமி நம்பிக்கை அளித்துள்ளார். அவருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்