சென்னையில் 1000 செமீ மழை: 200 ஆண்டுகளில் இது 4வது முறை!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (07:48 IST)
சென்னையில் இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1000 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது எனவும், இவ்வாறு 1000 மில்லி மீட்டர் மழை பெய்வது கடந்த 200 ஆண்டுகளில் இது நான்காவது முறை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார் 
 
இதற்கு முன் சென்னையில் கடந்த 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 1088 மில்லி மீட்டர் மழையும் 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1078 மில்லி மீட்டர் மழையும் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1049 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
இந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி மாலை ஏழு முப்பது மணி வரை சென்னையில் 1033 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்றும், இன்னும் அதிகமாக பெய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்