40 செமீ மழை பெய்தால் 4 நாட்கள் மழைநீர் தேங்கும்: சென்னை நிலவரம் குறித்து வெதர்மேன்..!

Mahendran
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (15:00 IST)
சென்னையில் நாளை அதிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 40 சென்டிமீட்டர் மழை பெய்தால் நான்கு நாட்கள் மழைநீர் தேங்கி இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.

காற்றழுத்த தாழ்வு மற்றும் பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும் நாளையும் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் சென்னை மழை குறித்து கூறிய போது, சென்னையால்  15 சென்டிமீட்டர் மழையை தாங்க முடியும். ஆனால் 20 சென்டிமீட்டர் மழை பெய்தால், ஒரு நாள் நீர் தேங்கும். 30 சென்டிமீட்டர் மழை பெய்தால், பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும்.

40 சென்டிமீட்டர் மழை பெய்தால், நான்கு நாட்கள் நீர் தேங்கும் சூழலில் தான் உள்ளோம் என்று தெரிவித்தார். மழைநீர் வடிகால் என்பது சாலைக்காக போடப்படுவது. 40 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்யும் போது, மழைக்காக வடிகால் அமைக்க முடியாது. எனவே நம் பகுதியில் சூழலை புரிந்து கொண்டு, முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்