வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று சென்னை - நெல்லூர் கடலோர பகுதிகளுக்கு திசைதிரும்ப கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் கனமழை பெய்தாலும், ரயில் சேவையில் இதுவரை பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. அதே சமயம், பயணிகள் ரயில் சேவை தொடர்பான தகவல்களை விரைவாக பெற தெற்கு ரயில்வே உதவி எண்களை வெளியிட்டுள்ளது.