தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பம் பதிவாகலாம்.. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்..!

Mahendran

வியாழன், 15 மே 2025 (10:17 IST)
தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பம் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை காட்டிலும் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அவசியம் இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சமீபத்திய அளவீடுகளில், ஈரோட்டில் அதிகபட்சமாக 106.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பரமத்தி வேலூர் மற்றும் திருச்சியில் தலா 104.9, திருத்தணியில் 104.18, வேலூரில் 104.36, மதுரை விமான நிலையம் மற்றும் பரங்கிப்பேட்டையில் தலா 104, மதுரை நகரில் 103.28, பாளையங்கோட்டையில் 103.82, தஞ்சாவூரில் 102.2, சேலத்தில் 101.48, சென்னை மீனம்பாக்கத்தில் 100.08 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
 
இதே நேரத்தில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கமாக மே 15 முதல் 20 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
 
மேலும், இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் மற்றும் மே 16 அன்று நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகாரில் லேசான மழை வாய்ப்பு உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்