தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (16:37 IST)
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தகவல்.  

 
தமிழ்நாட்டில் கோடைகாலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை எட்டியுள்ளது. எனினும் அவ்வபோது பெய்யும் மழையால் வெயிலின் தாக்கம் சில மாவட்டங்களில் குறைந்து வருகிறது.
 
இன்று வானிலை ஆய்வு மைய அறிவிப்பின் படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. 
 
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 8 மற்றும்  9 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்