தமிழகத்தில் இந்த ஆண்டு 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறதா? மாணவர்கள் அதிர்ச்சி..!

Mahendran

திங்கள், 21 ஜூலை 2025 (10:16 IST)
தமிழகத்தில் இந்த ஆண்டு 50 இளங்கலை மருத்துவப் படிப்பு (MBBS) இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC) நேற்று வெளியிட்ட அறிவிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள பிஎஸ்பி மருத்துவ கல்லூரியில் 150 ஆக இருந்த MBBS இடங்கள் 100 ஆக குறைக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
 
தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாததே இந்த இட குறைப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த கல்லூரி 250 இடங்களுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டு இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
 
நாடு முழுவதும் 766 கல்லூரிகளில் 1,15,900 MBBS இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 9 மாநிலங்களில் உள்ள 9 மருத்துவ கல்லூரிகளுக்கு முழு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் மொத்தம் 77 கல்லூரிகளில் 12,000 MBBS இடங்களுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பிஎஸ்பி கல்லூரி தவிர மற்ற 76 கல்லூரிகளில் கடந்த ஆண்டு இருந்த இடங்களே தொடர்கின்றன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்