தவெக மாநாட்டு திடலில் பெரியார், காமராஜர் கட்-அவுட்டுகள்.. விஜய்யின் நோக்கம் என்ன?

Siva

வியாழன், 24 அக்டோபர் 2024 (07:39 IST)
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், மாநாட்டு திடலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் மற்றும் விஜய்யின் கட்-அவுட்டுகள் இடம் பெற்றுள்ளதை பார்த்து, அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

திமுக எப்போதுமே பெரியாரின் கொள்கையை கடைபிடித்து வருவதை அடுத்து, திமுகவுக்கு போட்டியாக தான் களமிறங்க உள்ளதை மறைமுகமாக உணர்த்துவதற்கே விஜய், பெரியாரின் கட்-அவுட்டுக்களை வைத்திருப்பதாகவும், அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியுடன் நல்லுறவில் இருப்பதை காட்டுவதற்காக காமராஜர் கட்-அவுட்டை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், பட்டியல் இன மக்களின் ஆதரவை முழுமையாக பெறுவதற்காக அம்பேத்கரின் கட்-அவுட்டை வைத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில், இந்த கட்-அவுட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை முழுமையாக அறிவிப்பார் என்றும் சுமார் 2 மணி நேரம் அவர் இந்த மாநாட்டில் பேச இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து, இந்த மாநாட்டின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

மாநாட்டுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால், இந்த மாநாடு, தமிழ்நாடு அரசியலில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்