பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் முல்லை பெரியாறு அணை குறித்தும் அந்த அணையால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் ஊடகங்கள் மற்றும் யூட்யூபில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும் இவ்வாறு தகவல்களை பகிர்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீர் பாசன துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு பொறுப்பை ஒப்படைத்து உள்ளது என்றும் எனவே முல்லைப் பெரியாறு அணை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் இது குறித்து யாரும் தவறான தகவல்களை, பொதுமக்கள் அச்சப்படும் வகையிலான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டு கொண்டு உள்ளார்