உடனடியாக தமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசி - மத்திக்கு தமிழக அரசு கடிதம்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (09:37 IST)
தமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

 
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போட வருபவர்களை திருப்பி அனுப்பி வைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
 
இதனிடையே தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளதால், அடுத்த 10 நாட்களுக்கு தட்டுப்பாடியின்றி தடுப்பூசிகள் கிடைக்கும் வகையில், 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவேக்சின் என மொத்தம் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்