இந்த ஆண்டில் தமிழகத்தின் மழையளவு, வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது. மார்ச் 1ஆம் தேதி முதல் இந்நேரம் வரை, தமிழ்நாடு முழுக்க 90% அதிகமான மழை வீசியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் கடந்த காலத்தை ஒப்பிடும் போது, சுமார் 83% அதிகமாக மழை ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை பொருத்தவரை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிக அதிகமான மழை பதிவாகியுள்ளது. அங்கு வழக்கமான 6 செ.மீக்கு பதிலாக, 28 செ.மீ மழை பெய்துள்ளது.
கோயம்புத்தூர், நீலகிரி போன்ற இடங்களில் கடந்த சில நாள்களாகவே கனமழை அடிக்கடி பெய்துவரும் நிலையில், சென்னை மக்களும் மழையை அனுபவிக்கின்றனர். வானம் மேகமூட்டத்துடன் இருந்ததாலும், சிறு மழையாலும் நகரவாசிகள் கொஞ்சம் குளிர்ச்சியடைந்துள்ளனர்.