மது அருந்தியதே இளைஞரின் இறப்புக்கு காரணம்.. பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து மின்வாரியம்..!
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (10:10 IST)
சென்னை பூந்தமல்லி அருகே மின்வாரியத்தினர் தோண்டிய பள்ளத்தில் விழுந்து 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை மற்றும் மின்வாரிய துறை இது குறித்து விளக்கம் அளித்துள்ளது
சென்னை பூந்தமல்லி அருகே மின்வாரியத்தினர் பள்ளம் தோண்டியிருந்ததாகவும் அந்த பள்ளம் தோண்டிய ய இடத்தில் எச்சரிக்கை பலகை இல்லாததால் அந்த பள்ளத்தில் விழுந்து 22 வயது இளைஞர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. பூந்தமல்லி அருகே தடுப்புகள் அமைத்தே தான் பணிகள் நடைபெற்றன. பள்ளம் தோண்டி பணிகள் நடைபெறுவதாக எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் விபத்தின் போது இளைஞர்கள் மது அருந்தி இருந்ததாக காவல்துறையினர் எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் என்று மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.