இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

Siva

செவ்வாய், 20 மே 2025 (08:08 IST)
இலங்கை தமிழர் ஒருவர், கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சட்ட விரோதமாக வருகை தந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு 2010 ஆம் ஆண்டு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
 
அந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்தது. இந்த தீர்ப்பையும் எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
 
விசாரணை நடைபெறும் போது, நீதிபதி கூறியதாவது: "இந்தியாவில் 140 கோடி மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், மற்ற நாடுகளின் மக்களையும் அனுமதிக்க இது ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது."
 
இந்த நிலையில், தற்போது அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால், அங்கு கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக வாய்ப்புள்ளது என அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.
 
அதற்கு பதிலளித்த நீதிபதி, " இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்றால், வேறு ஏதாவது நாட்டுக்கு போக சொல்லுங்கள்," என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்