தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்து முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் பேட்டி அளித்துள்ளார்.
அவர் தனது பேட்டியில், "தமிழகத்தில் பருவமழை சராசரியாக 40 சென்டிமீட்டர் பெய்யும். ஆனால் நேற்றைய தினம் வரை 20 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை இயல்பாகவே இருக்கும்," என்றார்.
வானிலையை பொருத்தவரை 10 நாட்களை கொண்டு தான் கணிக்க முடியும், தற்போது புள்ளிகளின் அடிப்படையில் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, சென்னையை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் ரமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 650 மாணவர்கள் பங்கேற்ற இந்த அறிவியல் கண்காட்சியை பார்த்த ரமணன், மாணவர்கள் மற்றும் கண்காட்சி ஏற்பாட்டாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.