தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகள் குறித்து, பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது என்றார். நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிப்ரவரி 19ஆம் தேதி 2024 - 2025 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் அவர் கூறினார்.
பிப்ரவரி 20-ஆம் தேதி 2024 - 25 ஆம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கைகள் மற்றும் பிப்ரவரி 21-ஆம் தேதி ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் அளிக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.