குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்து தமிழ்நாடு முன்னேற்றம்!

Sinoj
வெள்ளி, 19 ஜனவரி 2024 (19:41 IST)
தமிழ்நாடு குழந்தை இறப்பு விகிதம்(IMR) குறைத்து முன்னேற்றம் அடைந்துள்ளது.
 
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் மக்களுக்குத் தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த  நிலையில், தமிழ்நாடு குழந்தை இறப்பு விகிதம்(IMR) குறைத்து முன்னேற்றம் அடைந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate) 13 ஆக இருந்த நிலையில், கடந்தாண்டு  8.2 ஆக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

நாட்டிலேயே தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் இந்த குறைந்த இறப்பு வீதத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டில் பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒரு வயதுக்குள் எத்தனை குழந்தைகள் இறக்கின்றன என்பதை கொண்டு IMR கணக்கிடப்படுகிறது.

மேலும், இந்திய அளவில் இது 28 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்