கேலோ-2024 தொடக்க விழா: கனவு நனவாகிய தருணம் இது!- அமைச்சர் உதயநிதி

Sinoj

வெள்ளி, 19 ஜனவரி 2024 (18:35 IST)
தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்து வருகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள்,  துரைமுருகன்,  சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை  பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

சென்னையில் தேசிய இளையோர் விளையாட்டு தொடர் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர்  உதயநிதி, கேலோ இந்தியா போட்டிகள் வரலாறு படைக்கும். செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான  நேரத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்து அரசு  நடத்தியது.

இதனைத்தொடர்ந்து, ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலகக் கோபை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாகக நடத்தியுள்ளோம்.

6வது கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாடு நடத்துகிறது. கனவு நனவாகிய தருணம் இது. அனைத்துத்துறைகளிலும் இந்திய ஒன்றிய அரசுக்கே வழிகாடும் வகையில் தமிழ்நாடு  செயல்பட்டு வருகிறது ''என்று தெரிவித்துள்ளார்.

இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்  சென்னை,  கோவை,  மதுரை,  திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இன்று முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்