இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார் சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள், துரைமுருகன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதன்பின், நேரு உள் விளையாட்டு அரங்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது: 2024 ஆம் ஆண்டு விளையாட்டுத்துறைக்கு சிறப்பான தொடக்கமான அமைந்துள்ளாது, தமிழ் நாடு,மற்றும் தமிழ்மொழியின் கலாச்சாரம் உங்களுக்கு உங்களின் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது, டிடி பொதிகை சேனல், டிடி தமிழ் எனப் பெயர் மாற்றப்பட்டு, தமிழின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.