தமிழக மக்களின் கவனத்திற்கு: மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பால் மழைக்கு வாய்ப்பு!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (07:42 IST)
இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது,


 


“மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்கக் கடலில், ஆந்திராவுக்கும், ஒடிசாவுக்கும் இடையே, மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு, இரண்டு நாட்களாக நீடிக்கிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.

சென்னை, வேலுார், சேலம், கோவை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில், அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருச்சி, நீலகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் நாகையில், லேசான பெய்ய வாய்ப்புள்ளது.” என்றனர்.
 
அடுத்த கட்டுரையில்