அம்மா உணவகம் கட்சியினுடையதா? அரசினுடையதா? கே.எஸ்.அழகிரிக்கு டவுட்!!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (12:51 IST)
அம்மா உணவகத்தை அதிமுக கட்சியின் நிதியிலிருந்து நடத்துவது சட்டவிரோதம் என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு நடத்திவந்த அம்மா உணவகங்களில் அனைத்திலும் அதிமுக சார்பில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
அம்மா உணவகங்களிலும் அதிமுக சார்பில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புகள் தமிழக அரசின் சார்பில் எந்த அடிப்படையில் செய்யப்பட்டது என்று தெரியவில்லை. 
அம்மா உணவகத்தின் மூலமாக அதிமுக கட்சியின் மூலமாக விலையில்லா உணவு வழங்க அனுமதிப்பது பாரபட்சமானது, ஒருதலைப்பட்சமானது. அம்மா உணவகத்தை தமிழக அரசின் நிதியிலிருந்துதான் நடத்த வேண்டுமேயொழிய அதிமுக கட்சியின் நிதியிலிருந்து நடத்துவது சட்டவிரோத செயலாகும். 
 
எனவே, இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க அதிமுகவுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுமா, அம்மா உணவகம் என்பது அரசுக்கு சொந்தமானது.   
 
அப்படி மீறி பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகமாகும். ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமானால் ஏற்கனவே நடத்தியதைப்போல அம்மா உணவகங்களை உரிய நிதி ஒதுக்கி சிறப்பாக நடத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்