கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் போக்குவரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உலகளவில் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது, ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் அன்றாட விலைக்கே விற்பனையாகி வருகிறது.
இதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை இன்னமும் குறைக்காமல் இருப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்த பேரிடர் காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது விவசாய பொருட்களை கொண்டு செல்வோர், சிறுவியாபாரிகள் உள்ளிட்ட பலருக்கும் நன்மையை தரும் என காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.