மைசூரில் தமிழ் நடிகர்கள் தங்கிய ஹோட்டல் முற்றுகை

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (02:09 IST)
படப்பிடிப்புக்கு சென்ற நடிகர்கள் தங்கிய ஹோட்டலை கன்னட வெறியர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 
படப்பிடிப்புக்காக மைசூரு செல்லும் தமிழ்த் திரைப்பட நடிகர்- நடிகையர் அங்குள்ள லலிதா பேலஸ் ஹோட்டலில் தங்குவதுதான் வழக்கம். அந்த வகையில் ஒரு படப்பிடிப்புக் குழுவினர் லலிதா பேலஸில் தங்கியிருந்தனர்.
 
இதுபற்றிய தகவலறிந்த கன்னட வன்முறைக் கும்பல், அந்த ஹோட்டலுக்குள், பாதுகாவலர்களையும் மீறி உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளது. போலீசார் விரைந்து வந்து, அவர்களை விரட்டியடித்தனர்.
அடுத்த கட்டுரையில்